அவுஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் குடும்பம் ஒன்று நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ளது.
தம்மை நாடு கடத்த வேண்டாம் என தமிழ் குடும்பம் ஒன்று தாக்கல் செய்த மனுவை அவுஸ்திரேலிய நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி வரை அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்க குறித்த குடும்பத்தினருக்கு நீதிபதி வாய்ப்பு வழங்கியுள்ளார்.
கடந்த வருடத்தில் நடேசலிங்கம், பிரியா உளிட்ட நான்கு பேரை நாடு கடத்தும் நோக்கில் விமானத்தில் ஏற்பட்ட போதும் கடைசி நேரத்தில் அது தவிர்க்கப்பட்டது.
இதனையடுத்து தம்மை அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழ் குடும்பத்தினர் நீதிமன்றில் மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
குறித்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது, நீதிபதி அதனை நிராகரித்துள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டமையை அடுத்து குறித்த குடும்பத்தினரை அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்க வைப்பதற்காக சிவில் சமூகத்தினால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நடேசலிங்கம் மற்றும் பிரியா ஆகியோர் 2012, மற்றும் 2013ஆம் ஆண்டுகளின் போது படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளனர். இதன்பின்னர் இருவரும் குயின்ஸ்லேன்ட்டில் குடியேறினர்.
இந்த நிலையில் நடேசலிங்கம் இரண்டு தடவைகள், இலங்கைக்கு சென்று வந்ததாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. அத்துடன் பிரியாவின் அடைக்கலக் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






