இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட வெங்காயவிதை மாட்டியது கடற்படையிடம்..

இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட வெங்காயவிதை மாட்டியது கடற்படையிடம்..

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட பெரிய வெங்காய விதைப் பக்கேற் 942னை நேற்றைய தினம் கடற்படையினர் கைப்பற்றி சிலாவத்துறைப் பொலிசாரிடம் கையளித்துள்ளதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் கடற்படையினர் மேலும் தெரிவிக்கையில் ,
இந்தியாவில் இருந்து கடத்திவரப்பட்டு வாகனத்திற்கு ஏற்றப்பட்ட நிலையில் நேற்று அதிகாலை மன்னார் சிலாவத்துறைப் பகுதியில் கடற்படையினாரால் 942 பைக்கேற் பெரிய வெங்காய விதை இனங்கள் கைப்பற்றப்பட்டன.இவ்வாறு கைப்பற்றப்பட்ட பைக்கேற்றுகள் ஒவ்வொன்றும் 500 கிராம் உடையவையாகும் . இதன் பிரகாரம் மொத்தம் 471 கிலோ கிராம் பெரிய வெங்காய விதைகள் கைப்பற்றப்பட்டன.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட விதை இனங்களை கடத்தப்பயன்படுத்தப்பட்ட ஓர் வடி ரக வாகனமும் திருகோணமலை மற்றும் குருநாகலைச் சேர்ந்த 5 பேரும் கைது ணெய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் தடயப் பொருட்கள் அனைத்தும் சிலாவத்துறைப் பொலிசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. என்றனர்.-

Get real time updates directly on you device, subscribe now.

You might also like