யாழ். வடமராட்சி நன்னீர் ஏரி பெருக்கெடுத்துள்ளதால் தொண்டமனாறு மற்றும் அக்கறை கடலேரி வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவி பணிப்பாளர் ரவி சங்கரப்பிள்ளை இன்று இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
அத்துடன், மாணவர்கள் மற்றும் மீன்பிடியில் ஈடுபடுபவர்களை அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நீரின் மட்டம் 3.8 அடிவரை உயர்வடைந்துள்ளது. வடமராட்சி நன்னீரேரி மற்றும் தொண்டமனாறு கடலேரி உட்பட அக்கறை பகுதி கடலேரிகளின் வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன.
எனவே, அதிகபட்ச நீரின் மட்டம் 4 அடியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளமையினால், தொண்டமனாறு மற்றும் அக்கறை பகுதிகளில் குளிக்க செல்பவர்களை அங்கு செல்ல வேண்டாமென்றும், அப்பகுதியை சேர்ந்த மக்கள் அவதானமாக இருக்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், மருதங்கேணி பிரதேசத்தில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், பொது மக்கள் பாதிப்பை எதிர்நோக்கி உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.






