சரத் பொன்சேகாவிற்கு அமைச்சுப் பதவி? ஜனாதிபதியின் தீர்மானம்

ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கடந்த காலங்களில் தாம் சம்பந்தமாக தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் மன்னிப்பு கோரினால் மட்டுமே அவருக்கு அமைச்சரவை அமைச்சர் பதவி வழங்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

அமைச்சரவையை நியமிப்பது தொடர்பாக ஜனாதிபதியுடன், ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களிடம் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் ஜனாதிபதி மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் சரத் பொன்சேகா கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

ஜனாதிபதிக்கு மூளை பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் அவர் பைத்தியகாரனை போல் நடந்து கொள்வதாகவும் பொன்சேகா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.