இலங்கையின் முன்னாள் முக்கியஸ்தர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஆர் குணதிலக்க மற்றும் வசந்த கரன்னாகொட ஆகியோருக்கு எதிராகவே வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது
கொலை குற்றச்சாட்டின் கீழ் வெளிநாட்டு நீதிமன்றில் வழங்கு தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கோத்தபாயவின் ஊடக பேச்சாளர் மிலிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் தமிழ் சட்டத்தரணிகள் குழுவினால் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே ராஜபக்ஷர்களுக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுகள் சர்வதே நீதிமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் புதிதாக தொடுக்கப்படவுள்ள வழக்குகள் ஆபத்தாக முடியும் என ராஜபக்ஷர்கள் அச்சம் கொண்டுள்ளதாக தெரிய வருகிறது.
#British and #US lawyers of the Tiger Diaspora led by Lawyer Sivani Thiyagarajah prepare to file Genocide charges in overseas Courts against former President @PresRajapaksa, Secretary @GotabayaR, and Armed Forces' Commanders S Fonseka, R Goonetilleke and W Karannagoda #SriLanka
— Milinda Rajapaksha (@milindarj) December 23, 2018






