ரணில் சொன்ன அந்தவொரு வார்த்தையால் வெளிநாட்டவர்களுக்கு ஏற்பட்ட அவநம்பிக்கை

அரசாங்கத்தின் அமைச்சரவை தற்காலிகமானது என பிரதமர் அறிவித்துள்ளமையானது, இலங்கை மீது வெளிநாட்டவர்கள் வைத்திருந்த நம்பிக்கையானது அவநம்பிக்கையாக மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரகொடி,

நாட்டில் கடந்த காலம் ஏற்பட்ட அசாதாரண நிகழ்வுகளுக்குப் பொறுப்புச் சொல்ல வேண்டியவர்களே மீண்டும் அமைச்சுப் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள இந்த அரசாங்கமானது, கால் உடைந்த குதிரைகளின் மீது கட்டப்பட்டுள்ள கரத்தை போன்றது.

இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் அமைச்சரவை தற்காலிகமானது என பிரதமர் அறிவித்துள்ளமையானது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் ஆகியோர் எமது நாட்டில் வைத்துள்ள நம்பிக்கையைப் பாதித்து.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தோசப்படுத்த அமைச்சுப் பதவிகளை வழங்கினாலும், அமைச்சுக்கள் கிடைக்காதவர்கள் அரசாங்கத்துக்கு எதிராக காணப்படுவதாகவும், இது அரசாங்கத்தின் பலவீனத்தை எடுத்துக் காட்டுகிறது என்றார்.