இலங்கையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் செல்பி படம் எடுக்க முயற்சித்தவருக்கு நேர்ந்த கதி!

வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் இருவரை தியலும நீர்வீழ்ச்சியை பார்ப்பதற்கு வழிகாட்டியான இளைஞர் ஒருவர் அழைத்துச் சென்று அவர்களுடன் செல்பி படம் எடுக்க முயற்சிக்கையில் தியலும நீர்வீழ்ச்சியில் விழுந்து மாயமான இளைஞர் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

எல்லப் பகுதியைச் சேர்ந்த கயான் வீரசிங்க என்ற 29 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து குறித்த பகுதியில் கூடிய இளைஞர்கள் நீர்வீழ்ச்சியில் விழுந்த இளைஞனை பெரும் சிரமப்பட்டு மீட்டதுடன் சடலம் கொஸ்லந்தை அரசு வைத்தியசாலையின் பிரேத அறையில் சட்ட வைத்திய பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது..

கொஸ்லந்தை பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.எஸ். தயாசிரி தலைமையிலான குழுவினர் மேற்படி சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles