நொருக்கப்பட்ட புத்தர் சிலைகள்! பின்னணியில் ஐ.தே.கட்சியின் முக்கிய அமைச்சரா?

முஸ்லிம் மக்கள் அதிகம் செறிந்து வாழும் மாவனெல்லை பகுதியில் புத்தர் சிலைகள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான நாசகர செயற்பாடுகளை ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர் ஹபிர் ஹாசிமின் ஆதரவாளர் மேற்கொண்டிருக்கலாம் என்று பௌத்த அமைப்புகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

எனினும், மாவனெல்லை பகுதியில் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் மக்களிடையே முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் நோக்கில் வேண்டுமென்றே சிலர் இச்செயலை செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, புத்தர் சிலை உடைக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles