இலங்கையில் செல்பியால் தொடரும் மரணங்கள்! பரிதாபமாக பலியான இரண்டு இளைஞர்கள்

பம்பரகம நீர்வீழ்ச்சியில் வீழுந்து காணாமல் போன இருவர் சடலமாக மீட்டுள்ளனர்.

ராவனா எல்லை பகுதியில் உயரத்தில் அமைந்துள்ள பம்பரகம நீர்வீழ்ச்சி விழுந்த இரு இளைஞர்களை இராணுவத்தினர் மீட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த இடத்திற்கு நேற்று உறவினர்கள் உட்பட நண்பர்களுடன் சென்றபோது மூன்று இளைஞர்கள் தவறி நீர்வீழ்ச்சியில் விழுந்ததில் இவ்விபரீதம் நேர்ந்துள்ளது.

செல்பி புகைப்படம் எடுக்க சென்ற போது இவ்வாறு குறித்த இளைஞர்கள் தவறி விழுந்துள்ளனர்.

குறித்த இரு நபர்களுடன் விழுந்த மற்றொரு நபர் தியதலாவை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.