தாயகத்தில் சிறுமி ஒருவர் திடீரென உயிரிழந்தமை அந்தப் பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியை சேர்ந்த 9 வயதான சந்திரபாலன் கானுயா எனும் சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
திடீர் காச்சலின் காரணமாக நேற்று முன்தினம் உயிரிழந்ததாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடும் காய்ச்சல் காரணமாக முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் கானுயா அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிசையின் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமியின் உடலம் உடற் கூற்றுப் பரிசோதனையின் பின்னர் நேற்று மாலையில் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிறுமியின் மரணத்திற்கு கிருமித் தொற்றே காரணம் என வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






