யாழில் பேருந்தை இடைமறித்துத் தாக்குதல் நடத்திய மர்ம கும்பலினால் பதற்றம்!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியிலிருந்து நேற்று மாலை யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து தர்மபுரம் பகுதியில் வைத்து ஹயஸ் வாகனம் ஒன்றும் உந்துருளி ஒன்றும் வந்தவர்கள் பஸ்ஸை தடுத்து பேருந்தின் சாரதியையும் பயணிகளையும் தாக்கியுள்ளனர்.

குறித்த பேருந்தின் முன்பக்க மின்குமிழையும் கண்ணாடியையும் உடைத்ததோடு உள்நுழைந்தனர்.

பேருந்தினுள் நுழைந்த குறித்த மர்ம நபர்கள் தலைக்கவசத்தினை கொண்டு பயணிகள் மீது தாக்குதல் நடத்தியதோடு இரும்பு கம்பிகளைக் கொண்டு பேருந்து ஓட்டினர் நடத்துனர்கள் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

சுமார் அரைமணிநேரம் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் பேருந்தில் பயணித்த பயணிகள் 119 என்ற அவசர அழைப்புக்குத் தொடர்புகொண்டு தகவலை தெரியப்படுத்தியபோதும் பொலிஸார் செல்லவில்லை.

இந்நிலையில் குறித்த தாக்குதலையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியும் பொலிஸார் குறித்த பகுதிக்கு வராமையால் பேருந்தை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டுசென்று குறித்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்த போதும் பொலிஸார் குறித்த முறைப்பாட்டை ஏற்கவில்லையென குறித்த பேருந்தில் பயணித்த பயணிகள் தெரிவித்துள்ளனர்.

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles