வடக்கு வெள்ள அனர்த்தம் குறித்த விசேட கலந்துரையாடல் தற்போது கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடந்து வருகிறது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, அமைச்சர்கள் ரிசாட் பதியுதீன், தயா கமகே ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இன்று காலை கொழும்பிலிருந்து உலங்கு வானூர்தி மூலம் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் குழு கிளிநொச்சிக்கு வந்தது. உலங்கு வானூர்தியிலேயே வெள்ளப்பாதிப்புக்கு இலக்கான பகுதிகளை சுற்றி பார்வையிட்டனர்.
பின்னர் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில், வெள்ள அனர்த்தம் மற்றும் நிவாரணப்பணிகள் குறித்த விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளனர்.






