யாழில் கரை ஒதுங்கிய மர்ம பொருளால் பீதியில் மக்கள்!

வடமாராட்சி கிழக்கு ஆலியவளை கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

இன்று அதிகாலை இந்த மர்ம பொருள் கரை ஒதுங்கியுள்ளது.

குறித்த பொருள் தொடர்பில் கடற்படை தற்போது ஆய்வுகளைச் செய்து வருகின்றனர்.

அதே வேளை மக்களும் கூட்டம் கூட்டமாகச் சென்று குறித்த பொருளை பார்வையிட்டு வருகின்றனர்.

குறித்த மர்ம பொருள் தொடர்பாக கருத்து தெரிவித்த மீனவர்கள் அந்த பொருள் ஏதாவது உடைந்த கப்பல் பாகமாக இருக்கக் கூடும் என நம்புவதாகத் தெரிவிக்கின்றனர்.