கொழும்பு இரவு நேர விடுதியில் நடந்தது என்ன? உயிரிழந்தவர் யார்?

கொழும்பு, கொம்பனித்தெருவில் கட்டடம் ஒன்றில் மின்சார லிப்ட் உடைந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த கட்டடத்தின் 9ஆவது மாடியில் உள்ள இரவு நேர விடுதிக்கு சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்று அதிகாலை 1.50 மணியளவில், 9 மாடியில் இருந்து இந்த லிப்ட் கீழ் நோக்கி வேகமாக விழுந்துள்ளது. இதில் பயணித்த இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞர் CR&FC அணியில் விளையாடும் கோகில சம்மன்தபெரும என்ற ரகர் வீரர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் பத்தரமுல்லை, தலங்கம வடக்கு பிரதேசத்தை சேர்ந்தவராவார். உயிரிழந்தவர் பிரபலமான ரகர் விளையாட்டு வீரர் என கூறப்படுகின்றது.

சம்பவத்தில் காயமடைந்த ஏனைய இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles