எனக்கு அடுத்த மாதம் திருமணமா? மறுக்கும் மஹிந்தவின் மகன்

தான் திருமண பந்தத்தில் இணையப் போவதாக நேற்று வெளியான செய்திகளில் உண்மையில்லை என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 24ஆம் திகதி தான் திருமண பந்தத்தில் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன. அத்துடன் திருமணத்திற்கான அழைப்பிதழும் ஊடகங்களில் வெளியாகியிருந்தது.

அடுத்த மாதம் 24ஆம் திகதி மெதமுலன வீரக்கெட்டியவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் திருமணம் நடைபெறுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது போலியான தகவல் என ரோஹித குறிப்பிட்டுள்ளார்.

அவரின் உத்தியோகபூர்வ டுவிட்டரில் பக்கத்தில் இந்தத் தகவலை ரோஹித வெளியிட்டுள்ளார்.

ரோஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர்களான நாமல் ராஜபக்ஷ, யோசித ராஜபக்ஷ இன்னும் திருமணம் முடிக்காதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

A fake invitation card is circulating regarding my wedding. Please note that the information on that is not true pic.twitter.com/KKRHJbmysp

— Rohitha Rajapaksa (@Rohitha_Chichi) December 29, 2018