ஜனவரி முதல் இலங்கையில் ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டை நடைமுறையில்..!

இலங்கையில் எதிர்வரும் 2019 ஆண்டு முதலாம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த அடையாள அட்டையை பரீட்சார்த்தமாக முன்னெடுக்கும் நடவடிக்ககை மேல், சப்ரகமுவ மாகாணங்களில் வழங்கும் பணி கடந்த 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த பரீட்சார்த்த நடவடிக்கை வெற்றியடைந்திருப்பதால் இந்த வேலைத்திட்டத்தை நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles