வவுனியா – ஓமந்தை, அரசமுறிப்பு பகுதியில் கிணற்றிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலம் இன்று காலை பொது மக்கள் வழங்கிய தகவலையடுத்து பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை தந்தை வயலுக்கு சென்று வீடு திரும்பிய சமயத்தில் வீட்டில் மகனை காணவில்லை என தேடியுள்ளார்.
இதன்போதே மகனான ஜெகமோகன் (24 வயது) கிணற்றில் சடலமாக மிதந்துள்ளமை தெரியவந்துள்ளது.
எனினும் மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.






