யாழில் கஞ்சா கடத்திய சந்தேகநபர் ஒருவரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் யாழ். புங்கன்குளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
நேற்று இரவு 10.30 மணியளவில் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ். அரியாலையை சேர்ந்த 31 வயதுடைய இளைஞர் ஒருவரே பொதி செய்யப்பட்ட 31.7 கிலோகிராம் நிறையுடைய கஞ்சாவை வானில் எடுத்து சென்றுள்ளார்.
இதன்போது, விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இளைஞர் பயணித்த வான் சோதனையிடப்பட்டுள்ளது.
அப்போது வாகனத்திற்குள் பொதி செய்யப்பட்ட நிலையில் கஞ்சா காணப்பட்டுள்ளது.
அத்துடன், உடனடியாக விசேட அதிரடிப் படையினர் வாகனம் உட்பட கஞ்சாவையும் கைப்பற்றியதுடன், இளைஞரை கைது செய்து யாழ். பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணை முன்னெடுத்து வருவதுடன், கஞ்சாவையும் வாகனத்தையும் யாழ். நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.






