வெளியாகியுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி உயிரியல்துறையில் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை கார்மேல் பற்றிமாக் கல்லூரி மாணவன் செல்வராஜா ஜினுசான் முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
இது தொடர்பில் 3 ஏ எடுத்து சாதனை புரிந்த குறித்த மாணவன் கருத்து தெரிவிக்கையில்,
நான் ஒரு நரம்பியல் நிபுணராக வரவேண்டுமேன்பதே ஆசை. பணத்தை மையமாக கொள்ளாமல் மக்களுக்கு இத்துறை மூலம் சேவையாற்ற வேண்டுமென்பதே எனது ஆசை.
அதற்காக மனதை ஒருநிலைப்படுத்தி இரவு 9 மணி முதல் நள்ளிரவு கடந்து 3 மணி வரை படிப்பேன்.
மாதிரி வினாத்தாள்களை கட்டாயம் செய்ய வேண்டும். தவணைப் பரீட்சைகளை தவறவிடக் கூடாது. குறிப்பாக நல்லவர்களை நண்பனாக்கி கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.






