இலங்கை சென்றவர் விமான நிலையத்தில் கைது! அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

இலங்கை சென்ற நபர் ஒருவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய, போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஆஷிஸ் போதைப் பொருளுடன் இலங்கைக்குள் செல்ல முயற்சித்த இந்திய நாட்டவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் பயணப் பையில் இருந்து 1 கிலோ 280 கிராம் நிறையுடைய ஆஷிஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் நேற்று (30) இரவு இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த நிலையிலேயே விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 30 வயதுடையவர் எனவும் அவர் கைது செய்யப்பட்ட நிலையில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட ஆஷிஸ் போதைப் பொருள் சுமார் 2 மில்லியன் ரூபா பெறுமதி எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles