இலங்கையிலிருந்து தொழில்வாய்ப்புக்காக மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு செல்வோரின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்த எண்ணிக்கை 13 சதவீத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்பயிற்சி அல்லாதவர்கள் வெளிநாடுகளுக்கு தொழிலாளர்கள் மற்றும் வீட்டுப் பணிப்பெண்களாக செல்வதை அரசாங்கம் கட்டுப்படுத்தி வருகின்றது.
இந்த நிலையிலேயே இந்த வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இலங்கைக்கு அந்நியசெலாவணியை வழங்குகின்ற பிரதான துறைகளில் ஒன்றாக தொடர்ந்தும் வெளிநாடுகளில் பணியாற்றுகின்ற தொழிற்படையே நிலவுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.






