புத்தாண்டு தினத்தில் தாயகத்தில் வெடித்து சிதறிய தமிழன் குண்டுகள்! பதற்றமடைந்த மக்கள்

விடுதலைப் புலிகளின் தயாரிப்பில் உருவாகிய தமிழன் குண்டுகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் சில இன்று முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் செயலிழக்க செய்யப்பட்டுள்ளன.

2009 ஆண்டு இறுதியுத்தத்தின் போது; விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் கைவிடப்பட்ட 10 தமிழன் குண்டுகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் சில இன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்கப்பட்டன.

இந்நிலையில் மீட்க்கப்பட்ட வெடிகுண்டுகள் நீதிமன்றத்தின் அனுமதியுடன் பாதுகாப்பான முறையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று வெடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக அதிரடிப்படையினார் தெரிவித்தனர்.

புத்தாண்டு தினமான இன்று வெடிபொருட்கள் வெடிக்க வைத்தமையினால் அந்தப் பகுதி மக்கள் மத்தியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles