புத்தர் சிலைகளை சேதமாக்கிய சம்பவம் – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

மாவனெல்லை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஏழு பேரும் எதிர்வரும் 10ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று மாவனெல்லை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேகநபர்களை கைது செய்வதற்காக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக காவற்துறை நீதிமன்றிற்கு அறிவித்துள்ளது.