கடந்த வாரம் வெளியிடப்பட்ட க.பொ.த. உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் ஹொரவபொத்தான பதியுத்தீன் மஹ்மூத் மஹா வித்தியாலயத்தின் 07 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுள்ளதாக கல்லூரியின் அதிபர் ஜனாப் அப்துல் சத்தார் தெரிவித்துள்ளார்.
கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற உயர் தரப் பரீட்சையில் 25 மாணவர்கள் கலைப் பிரிவில் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். இவற்றில் 07 மாணவ, மாணவிகள் சிறந்த பெறுபேற்றைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது மேலும் கருத்து தெரிவிக்கையில்,
பரீட்சைக்கு தோற்றிய 25 மாணவர்களில் 21 பேர் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதிப்பெற்றுள்ளனர்.
பாடசாலை வரலாற்றில் சுமார் 47 வருடங்களுக்கு பின்னர் க.பொ.த. உயர் தரப் பரீட்சையில் இவ்வாறான ஓர் பெறுபேறுபெற்றுக்கொள்வது இதுவே முதல் சந்தர்ப்பம் என்பதால் இது பாடசாலையின் வரலாற்றுச் சாதனையாக பதியப்பட்டுள்ளது. எனவும் தெரிவித்துள்ளார்.






