இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக அதிகளவு ஹெரோய்ன் தொகை கைப்பற்றப்பட்டமை தொடர்பில் பங்களாதேஸ் அரசாங்கம், விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது.
இரண்டு பங்களாதேஸ் நாட்டவரிடம் இருந்தே இந்த ஹெரோய்ன் தொகை தெஹிவளை பிரதேசத்தில் வைத்து அண்மையில் கைப்பற்றப்பட்டது.
இந்தநிலையில் இலங்கை அரசாங்கம் கோரியமையையடுத்து தமது அரசாங்கம் இது தொடர்பான விசாரணைக்கு உதவும் என்று பங்களாதேஸின் உயர்ஸ்தானிகர் எம்.ரியாஸ் ஹமிதுல்லா தெரிவித்துள்ளார்.
இப்படியான சம்பவம் ஒன்றிற்கு வெளிநாட்டு அரசாங்கம் இலங்கைக்கு உதவ வந்தமை வரலாற்றில் முதன் முறையாக பார்க்கப் படுகிறது.
இந்த இரண்டு பங்களாதேஸ் பிரஜைகளிடம் இருந்தும் 278 கிலோகிராம் ஹெரோய்னும், 5 கிலோகிராம் கொக்கேய்னும் கைப்பற்றப்பட்டன.
இதில் 278 கிலோகிராம் ஹெரோய்னின் சந்தை பெறுமதி 3336 மில்லியன் ரூபாய்கள். 5 கிலோகிராம் கொக்கெய்னின் பெறுமதி 75 மில்லியன் ரூபாய்களாகும்.
ஏற்கனவே கடந்த டிசம்பர் 14ஆம் திகதியும் 32 கிலோகிராம் ஹெரோய்னுடன் பங்களாதேஸின் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






