இரண்டு வீடுகளில் திருடிய நபர் ஒருவரை கிராமவாசிகள் மடக்கிப் பிடித்து தாக்கி, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புத்தள பொலிஸ் பகுதிக்குட்பட்ட உனாவட்டுன பிரதேசத்தில் அமைந்துள்ள இரண்டு வீடுகளில் இன்று அதிகாலை நுழைந்து வீட்டினுள் இருந்த பொருட்களையும் மற்றும் கைப்பை போன்றவற்றை திருடியதுடன் பின்னர் மற்றொரு வீட்டிற்குள் நுழைந்த நேரத்தில் கிராமவாசிகள் குறித்த திருடனை மடக்கிப் பிடித்துள்ளனர்.
கைகள் மற்றும் கால்களை கட்டி தாக்குதல் நடத்தியதுடன், பின்னர் குறித்த நபரை புத்தள பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
சந்தேகநபரும் மற்றொருவரும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் மற்ற நபர் ஓடிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் புதுருவாகல பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதான நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.
வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் இன்று சந்தேகநபர் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் எனவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் புத்தள பொலிஸார் தெரிவித்தனர்.






