யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதி ஆறுகால் மடத்தடிப் பகுதியில் நேற்றுக் காலை ,இடம்பெற்ற வாகன விபத்தில் முதியவர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
இச் சம்பவத்தில் ஆறுகால் மடம் புதுவீதியைச் சேர்ந்த திரவியம் வியஜராசா என்னும் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.குறித்த குடும்பஸ்தர் மானிப்பாய் வீதி ஆறுகால்மடப் பகுதியில் சிறு வியாபார நிலையம் ஒன்றினை நடத்தி வரும் நிலையில் நேற்றுக் காலை வழமை போன்று வீட்டிலிருந்து வியாபார நிலையத்தை திறப்பதற்காக நடந்து சென்றுள்ளபோது வீதியை கடக்க முற்பட்ட போது யாழ்ப்பாணத்திலிருந்து மானிப்பாய் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் வீதியிலிருந்து தூக்கி எறியப்பட்ட குடும்பஸ்தர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ்.போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலத்தை யாழ்.போதனாவைத்தியாசலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்துள்ளனர்






