பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்தகு தாயும் பேர்தியாரும் அதிரடியாக கைது

பிறந்து 28 நாளேயான சிசுவை கொலை செய்த சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாய் மற்றும் தாயாரின் தாயார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்த இருவரும் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவானால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிசுவின் தாயாரை உடல்நல வைத்தியரிடம் அழைத்து சென்று பரிசோதனை செய்யுமாறும் ஹட்டன் நீதிவானால் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

கொட்டகலை யூனிபில்ட் அந்தோனிமலை தோட்டப்பகுதியில் பிறந்து 28 நாளேயான சிசு ஒன்றை பால் கொடுத்து உயிருடன் குழிதோண்டி புதைத்துவிட்டு சற்று நேரம் கழிந்து புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து சிசுவை தோன்றி எடுத்து தனது குழந்தைக்கு தொண்டை பகுதியில் பால் ஊட்டும் போது மூச்சுத்திணறி இறந்துள்ளதாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்.

குறித்த சிசு இறந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டதாக கொட்டகலை வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் தெரிவித்ததை அடுத்து சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையின் ஊடாக ஹட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்கபட்டமையை அடுத்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சந்தேகத்தின் பெயரில் இரண்டு பெண்களும் கைது செய்யபட்டதாக பொலிஸார் தெரிவித்தார்.பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பெண் விசாரணைகளின் போது தெரிவித்ததாவது,

எனக்கும் எனது கணவரும் இடையில் குடும்பத் தகராறு ஏற்பட்டு ஒருமாதங்கள் கடந்துள்ளன எனது கணவர் கண்டி பகுதியில் தொழில் புரிந்து கொண்டிருந்தார்.

நான் ஆத்திரம் அடைந்ததன் காரணமாகவே குறித்த எனது குழந்தையை பால் கொடுத்து குழி தோண்டி உயிருடன் புதைத்து மீண்டும் எனது குழந்தையை தோன்றி எடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக சிசுவின் தாய் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் இருந்து தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சிசுவின் பிரதே பரிசோதனை இன்று டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரியின் தலைமையில் இடம் பெற்றபோது சிசு உடலின் சில பாகங்கள் கொழும்பு இராசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கபட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.