மட்டகளப்பில் இளைஞன் எடுத்த விபரீத முடிவு! கதறி துடிக்கும் குடும்பத்தார்

மட்டக்களப்பு கோட்டமுனை பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் வீட்டீன் கூரையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்

பாடுமீன் வீதி கோட்டமுனையைச் சேர்ந்த 24 வயதுடைய செல்வராஜா பிரணவராஜா என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்

குறித்த இளைஞரின் உறவினர்கள் சம்பவதினமான இன்று அதிகாலையில் வீட்டின் கதவை திறந்து வெளியில் வந்தபோது வீட்டின் முன் வெளிப்பகுதியிலுள்ள கூரையில் நயலோன் கயிற்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில் கண்டுள்ளனர்

இதனையடுத்து சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை உயிரிழந்த இளைஞனனின் தந்தையார் பொலிஸ் சப் இன்பெஸ்டராக கடமையாற்று வருவதுடன் தாயாரும் பொலிசாராக கடமையாற்றி ஓய்வு நிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.