புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர்! இரு தமிழ் பேசுபவர்கள்!! கூட்டமைப்பிற்கு ஆப்பு..

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அசாத் சாலி – மேல் மாகாணம்

மைத்திரி குணரத்ன – மத்திய மாகாணம்

எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா – கிழக்கு மாகாணம்

சரத் ஏக்கநாயக்க – வட மத்திய மாகாணம்

பேஷல ஜயரத்ன பண்டார – வட மேல் மாகாணம்

ஆளுநர்கள் சற்று முன்னர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் கிழக்கு மற்றும் மேல் மாகாண ஆளுநர்கள் தமிழ் பேசும் சமூகத்தை சேர்ந்தவர்களாக காணப்படுகிறார்கள்.

எனினும் இன்னும் நான்கு ஆளுநர்கள் நியமிக்கப்பட வேண்டியுள்ள நிலையில் வட மாகாண ஆளுநர் நியமனம் தொடர்பிலான எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகிறது.

இந்த நிலையில் கிழக்கு மாகாணத்திற்கு முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர் நியமிக்கப்பட்டமையானது விமர்சிக்கப்பட வேண்டிய விடயம் அல்ல.

எனினும் M.L.A.M.ஹிஸ்புல்லாஹ் தமிழ் மக்களுக்கு இழைத்த துரோகம் அனைவருக்கும் தெரிந்ததே.

அவர் ஓட்டமாவடியில் பிள்ளையார் ஆலயத்தை உடைத்து அதே இடத்தில் மீன் சந்தையை நிர்மாணித்தமையை அவரே பல காணொளிகளில் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் வடக்கு கிழக்கில் சிங்களவர்களை நியமித்தால் பௌத்த மயமாக்கல் என்றால், இவர் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமையை முஸ்லிம் மயமாக்கல் என்றா கூறுவது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை போல் முட்டாள் அரசியல் கட்சி இலங்கையில் வேறெதுவும் இல்லை. முஸ்லிம்கள் பிரதி அமைச்சு, அமைச்சு உள்ளிட்ட உயர்ந்த அதிகாரங்களை பெற்றுக் கொண்டு இன்று கிழக்கு மாகாண ஆளுநர் பதவி வரை முன்னேறி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தமிழர்களுக்கு எதுவும் செய்யாமல் கையறு நிலையில் விட்டு செல்கின்ற நிலையே காணப்படுகிறது. இந்த நிலையில் தமிழ் மக்களுக்கு கூட்டமைப்பு என்ன தீர்வினை பெற்று தரப்போகிறது என்பது புரியாத புதிராகவே காணப்படுகிறது.

வடக்குடன் கிழக்கை ஒப்பிட்டு அரசியல் செய்வது அடி முட்டாள் தனம். வட மாகாணம் தமிழர்களுக்கு சுருங்கி கொண்டு வருகின்ற மாகாணமாக காணப்படுகிறது.

கிழக்கில் ரவூப் ஹக்கீம் 712 நியமனங்களையும் கொடுத்தார். ஆனால் அவை அனைத்தும் முஸ்லிம்களுக்கே கொடுக்கப்பட்டன. அதேபோல் கல்முனை தமிழ் பிரதேச செயலகம் உருவாக்க முயற்சிக்கப்பட்ட போது ஹாரிஸ் எதிர்ப்பு வெளியிட்டு அதுவும் நடக்கவில்லை.

இதேவேளை பெரும்பான்மை கட்சிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆட்சியமைக்க அழைத்த போது அது நிராகரிக்கப்பட்டது. எனினும் கூட்டமைப்மபு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் ஒன்றிணைந்த நிலையில் முதலமைச்சர் பதவி கிழக்கில் முஸ்லிம்களுக்கு கிடைத்தது.

எனினும் தமிழ் மக்களுக்கு இதனால் எந்தவித நன்மையும் இல்லை. இவ்வாறான நிலையில் வட மாகாண ஆளுநராக யார் நியமிக்கப்பட போகிறார் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது. சிலவேளை ஈபிடிபி சார்ந்த யாராவது நியமிக்கப்படலாம் என்ற கூற்றும் காணப்படுகிறது.

கடந்த காலங்களை போல் வடக்கு, கிழக்கில் கூட்டமைப்பு எதிர்ப்பு அரசியல் செய்யப்போகிறதா? ஒட்டு மொத்தத்தில் தமது நலன்சார் அரசியலையே கூட்டமைப்பு முன்னெடுத்து வருகிறது.

அவர்கள் தமிழ் மக்கள் சார்ந்த அரசியலை முன்னெடுக்கவில்லை. அவர்கள் சிங்கள அரசியல்வாதிகளின் பின்னால் எடுபிடிகளாக திரிகின்றார்கள். அவர்களை கொண்டு வேலை செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கல்வி, பொருளாதாம் என அனைத்தையும் இழந்த தமிழ் சமூகத்தை சேர்ந்த ஒவ்வொருவரும் தற்போது தாம் நிர்வாண நிலைக்கு சென்று விடுவோமா என்ற சந்தேகத்தில் உள்ளார்கள்.

த.தே.கூட்டமைப்பின் அரசியல் இறுதியில் கூழ் முட்டை கதையாகவே முடிவதற்கான கதையாக அமையவுள்ளமை தெரிகிறது. நாங்கள் என்ன செய்வது சிங்கள தலைமைகள் தரவில்லை என்பதை தெரிவித்துக் கொண்டே அவர்கள் தமது அரசியல் பயணத்தை தொடரவுள்ளார்கள்.

சில வேலை மேற்கூறப்பட்டுள்ள இந்த வார்த்தைகள் கூட்டமைப்பினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தலாம். எனினும் வடக்கு போல கிழக்கை யோசிப்பது அடிமுட்டாள் தனம்.

சம்பந்தன் ஆளுமை மற்றும் அனுபவம்மிக்கவராக இருந்தாலும் இந்த விடயத்தில் ஏன் மெத்தனத்துடன் செயற்படுகிறார்? அல்லது ஏன் செயற்படவில்லை என்பது கேள்விக்குறியே.

வடக்கு மற்றும் கிழக்கு ஆளுநர்கள் நியமனம் என்பது வடக்கு, கிழக்கை கட்டி போடும் குட்டி ஜனாதிபதிகளாக காணப்படுகிறது.

எனவே இனியாவது கூட்டமைப்பின் இராஜதந்திரம் மக்களுக்காக இருக்க வேண்டும், ஜனநாயகம் என்ற போர்வையில் பெரும்பான்மையினருக்கு பாடுபடுகின்றதால் தமிழர்களுக்கு ஆபத்து.

விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தூர நோக்கற்று உள்ளமை தமிழ் சமூகம் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles