சஜித் இல்லை – ரணிலே ஜனாதிபதி வேட்பாளர்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவே ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் நாடாளுமன்றத்தில் அந்தக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் பொதுமக்களின் எண்ணப்படி தெரிவு செய்யப்படுவார் என்றும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், எதிர்வரும் 14 மாதங்களில் பொருளாதாரத்தைப் பலப்படுத்தி, நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் அமைச்சர் சஜித் பிரேமதாசவே களமிறக்கப்படுவார் என அந்த கட்சியின் ஒரு சாரார் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ரணில் விக்ரமசிங்கவே ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என அமைச்சர் காமின் ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.