வெளிநாடு சென்று மாயமான இலங்கை பெண்கள்!

பணிப்பெண்ணாக வெளிநாடு சென்ற நிலையில் இரண்டு பெண்கள் காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போன இரு பெண் தொடர்பான தகவல்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், பொது மக்களிடம் கோரியுள்ளது.

2016ஆம் ஆண்டு கட்டாருக்கு பணிப் பெண்ணாக பொலநறுவையை சேர்ந்த சந்தியா குமாரி என்பவர் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என பணியகம் குறிப்பிட்டுள்ளது.

அதேபோன்று 2011ஆம் ஆண்டு ஜோர்தான் நோக்கி சென்ற வனாலுவாவவை சேர்ந்த கிரிபத்கொட லலானி என்பவர் தொடர்பிலும் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என பணியகம் அறிவித்துள்ளது.

இந்த பெண்கள் தொடர்பில் தகவல் அறிந்தால், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் 0112-864136 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பணியகம் கேட்டு கொண்டுள்ளது.

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles