சபரிமலையில் தரிசனம் செய்து சர்சசையை ஏற்படுத்திய இலங்கை பெண் தொடர்பில் வெளியாகிய தகவல்!

இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் சபரிமலையில் தரிசனம் மேற்கொண்ட செய்தி கடந்த வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

எனினும் இன்னும் அந்த செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை என்று, சபரிமலை தந்திரி கண்டராரு ரஜுவராரு தெரிவித்துள்ளார்.

சசிக்கலா என்ற 46 வயதான குறித்த இலங்கைப் பெண், கடந்த வியாழக்கிழமை 10.46 அளவில் பொலிஸ் பாதுகாப்புடன் சபரிமலையில் தரிசனம் செய்ததாக செய்தி வெளியாக்கப்பட்டது.

எனினும் இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், அதனால் சபரிமலையில் புனிதப்படுத்தல் பூஜைகள் அவசியம் இல்லை என்றும் தந்திரி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தங்களால் மரக்கோட்டம் வரையில் மாத்திரமே செல்ல முடிந்ததாக, சசிக்கலாவும் அவரது கணவரும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.