காதல் விவகாரம்? கல்லடி பாலத்தில் தற்கொலை செய்துகொண்ட சிறுமி! வெளியாகிய தகவல்கள்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட 16 வயது சிறுமியின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நேற்று முன்தினம் பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்குடா பூநொச்சிமுனை வீதி 2 குறுக்கு வீதியைச் சேர்ந்த 16 வயதுடைய கிருஸ்ணபிள்ளை கிருஷந்தினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமி க.பொ.த சாதாரணதரத்தில் கல்வி கற்று வருகின்ற நிலையில் சம்பவதினமான நேற்று முன்தினம் பகல் 12 மணியளவில் மட்டக்களகப்பு நகருக்கு சென்று விண்ணப்பம் ஒன்றை நிரப்ப செல்வதாக வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்

இந்த நிலையில் குறித்த சிறுமி ஆரையம்பதியைச் சேர்ந்த 23 வயதுடைய ரவீந்திரன் வசந்தன் என்ற இளைஞனை காதலித்து வந்துள்ள நிலையில் இருவரும் சம்பவதினமான பிற்பகல் 2 மணியளவில் சம்பவத்தின் போது கல்லடி பாலத்தில் காதலன் மற்றும் காதலனின் நண்பருடன் சந்தித்த நிலையில் காதலனுக்கும் காதலிக்கும் இடையே சம்பாசனை இடம்பெற்றவேளை காதலி பாலத்தில் இருந்து திடீரென ஆற்றில் குதித்துள்ளார்.

இதனை தொடர்ந்து காதலனுக்கு நீந்த தெரியாததால் நண்பன். நண்பனின் காதலியை காப்பாற்ற ஆற்றில் குதித்த போதும் அவரை காப்பாற்ற முடியாமல் அவர் நீந்தி கரைசேர்ந்தார்.

சிறுமியின் சடலம் இன்று காலை கரை ஒதுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிசார் குறித்த காதலனை கைது செய்துள்ளதுடன் இது தொடர்பாக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles