பள்ளிவாசல் கட்ட நிதியுதவு வழங்கிய சம்பந்தன்: கொதித்தெழும் தமிழர்கள்…

தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் புல்மோட்டை பள்ளிவாசலுக்கு 5,00,000 ரூபா நிதி ஒதிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் எதிர்க் கட்சித் தலைவருமான சம்பந்தன் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்தவர். தமிழர்களின் தலை நகரமான திருகோணமலையில் தற்போது, இந்து ஆலயங்களின் பராமரிப்பு கேள்விக்குள்ளாகியிருக்கிறது.

ஏற்கனவே சிங்களக் குடியேற்றங்களும், பௌத்த மதத்தின் ஆக்கிரமிக்களும் அதிகரித்திருக்கும் நிலையில், அதனைப் பாதுகாப்பதற்கும், அழிந்துவரும் மரபுரிமைகளை மீட்டெடுக்கவும் தமிழர் தரப்பு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

இந்நிலையில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் புல்மோட்டை பள்ளிவாசலுக்கு 5,00,000 ரூபா நிதி ஒதிக்கியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

குறிப்பாக, திருகோணமலையில் எத்தனையோ புராதன ஆலயங்கள் பாழடைந்து காணப்படுகின்றன. இதேவேளை, சம்பந்தனின் சொந்த ஊர்ப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் ஒரு ஆலயம் உள்ளதாகவும் சிலர் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் இவர் இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட நிதி வழங்கி இருப்பது கண்டனத்துக்குறியது என்கிறார் இணையவாசிகள்.

இதேவேளை இஸ்லாமியர்களுக்கு சவுதியிலிருந்து மாதா மாதம் தனது தூதரகம் ஊடாக நிதி ஒதுக்கிறது. அதே போல் கட்டார் டுபாய் இஸ்லாமிய நாடுகளின் தூதரகங்கள் இஸ்லாமிய அமைப்புகளின் தனவந்தர்கள் நிதி வழங்கிவருகின்றனர் என்கின்றன தகவல் அறிந்த வட்டாரங்கள்.

அதுமாத்திரமல்லாது, இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த இஸ்லாமியர்களும் நிதியுதவி வழங்குகின்றனர். இவ்வாறு இருக்க இலங்கை இஸ்லாமிய மத விவகார அமைச்சு நிதியுதவி அளிப்பது எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இப்படி இருக்க, இந்து மதத்தை முற்றிலும் ஆதரித்து செயற்படும் சம்பந்தன், தமிழர்களின் கலாசாரத்தை அழிக்க இஸ்லாமிய அடிப்படைவாத அரசியல்வாதிகளுடன் கூட்டணி வைத்து செயற்படுவது என்பது தமிழ் மக்களினதும், அவர்களின் நம்பிக்கை மீதும் அக்கறையற்றவராக செயற்படுகின்றார் என்றும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.