இறுதிப்போரில் காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடி தேடியே உயிர்விட்ட தாய்!

முல்லைத்தீவில் இறுதிப்போரில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடிவந்த சேர்ந்த தாயார் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

முல்லைத்தீவு தேவிபுரம் ‘அ ‘பகுதியை சேர்ந்த 68 வயதான சண்முகராசா விஜயலட்சுமி என்பவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு சண்முகராசா அர்ஜின் என்ற அவரது மகன் முல்லைத்தீவு வலைஞர் மடம் பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் காணாமல் போயிருந்தார்.

அன்று தொடக்கம் தனது மகனை தொடர்ந்து தேடி வந்ததோடு பல போராடடங்களிலும் கலந்துகொண்டு தனது மகனை தேடி வந்தார்.

மகன் காணாமல் போன நாளிலிருந்து மனதளவிலும் உடலளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென மரணமடைந்துள்ளார்.

வடக்கு கிழக்கு பகுதியில் காணாமல் போனவர்களின் உறவுகள் இவருடன் சேர்த்து 19 பேர் இதுவரை மரண மடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles