மட்டக்களப்பில் 90ம் ஆண்டு காலத்தில் பல்கலைக்கழகத்தில் தமிழ் இளைஞர்களை கடத்தி கொலை செய்த ஜிகாத் உறுப்பினரை நேற்றிரவு சவுக்கடி தமிழ் கிராமத்தினூடாக பதுங்கி சென்ற வேளை இனம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு தப்பியோடி ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் தற்போது முன்னால் கிழக்கு மாகாணசபை உறுப்பினரான ஏறாவூர் சுபைர் மூலம் பெற்றோலிய கோப்ரேசனில் வேலை பெற்றார்.இவர் வேலை முடிந்து இரவு வேளை உள் தமிழ் கிராமத்தினூடாக சென்றது பல சந்தேகங்களை உருவாக்கியுள்ளது.
மட்டக்களப்பிலிருந்து தன்னாமுனைக்கு இடையிலிலுள்ள பிரதான வீதி வெள்ளத்தால் மூடி பாதை துண்டிக்கப்பட்டால் மாத்திரமே சவுக்கடியிலிருந்து திராய்மடு,பாலமின்மடு தமிழ் பகுதியை சார்ந்த கடற்கரை வீதியை பயன்படுத்துவது வழமை ஆனால் மட்டக்களப்பில் தற்போது சீரான காலநிலை நிலவுகின்றது.
எனவே இவர் ஏதாவது போதைப்பொருள் கடத்தினாரா அல்லது மோட்டார் வண்டி ஆவணம் இல்லாமல் பிரயாணம் செய்வதற்காக இப்பாதையை பயன்படுத்தினராஎன பல சந்தேகம் இக்குறித்த முஸ்லிம் உறுப்பினர் மீது ஏற்பட்டுள்ளது.






