இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்புபவர்களின் கவனத்திற்கு..!

வெளிநாடுகளில் இருந்து வங்கிகள் ஊடாக இலங்கைக்கு அனுப்பப்படும் பணத்திற்கான வருமான வரி நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் மங்கள சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, கடந்த 2018 நவம்பர் மாதம் 15ஆம் திகதி அல்லது அதற்கு பின்னர் வணிக வங்கிகளினூடாக இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட பணத்திற்கான வருமான வரி விலக்கு அளிக்கப்படுவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.