இலங்கையில் ஹோட்டல் கழிப்பறைக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!! கமராவில் வெளியான அம்பலம்

சுற்றுலா விடுதி ஒன்றில் வெளிநாட்டு யுவதி ஒருவர் கழிப்பறைக்குச் சென்ற போது இரகசியமான முறையில் அதனை படம் பிடிக்க முயன்ற இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சுற்றுலா விடுதியில் பணி புரிந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வெல்லவாய பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குறித்த சந்தேக நபர் வெளிநாட்டு யுவதி கழிப்பறைக்கு செல்லும் வரை காத்திருந்து, கழிப்பறை கதவின் அருகாமையில் சென்றுள்ளார்.

கதவின் அருகாமையில் கைபேசியினை இரகசியமான முறையில் வைத்து புகைப்படம் எடுக்க முயன்றுள்ளமை தெரியவந்துள்ளது.

பின்னர் சம்பவம் குறித்து, இந்திய நாட்டு யுவதி சுற்றுலா விடுதி முகாமையாளரிடம் முறையிட்டுள்ள நிலையில், சம்பவம் குறித்து காவற்துறைக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

பதுளை – கொஸ்வத்த பிரதேசத்தினை சேர்ந்த சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வெல்லவாய காவற்துறை முன்னெடுத்துள்ளது.

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles