கிளிநொச்சியில் மீள முடியாத துயரத்தில் கதறும் குடும்பம்!

கிளிநொச்சி பளை இயக்கச்சி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியான மூவரினதும் சடலம் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

பளை இயக்கச்சி பகுதியில் இராணுவத்தின் கனரக வாகனத்துடன் முச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதியத்தில் நேற்று முன்தினம் விபத்து சம்பவம் இடம்பெற்றது.

இதில், முச்சக்கர வண்டியில் பயணித்த பி.ஜெயக்குமார் (36), கே.குகதாஸ் (32), எஸ். ரதீஸ்வரன் (26) ஆகிய மூவரே பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிளிநொச்சியில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டதுடன், இந்த துயரச் சம்பவத்தினால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like