வட்டிக்கு மேல் வட்டி.. விஷம் குடித்த பெண்! வாட்ஸ் அப்பில் வைரலாகும் வீடியோ

தமிழகத்தில் கந்து வட்டி குறித்து பொலிசாரிடம் புகார் அளித்தும் அவர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் விரக்தியடைந்த பெண் ஒருவர் உயிரைவிடுவதைத் தவிர வேறு வழி எனக்கில்லை என்று கூறி வெளியிட்டுள்ள வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள லாடனேந்தலை சேர்ந்தவர் மாரீஸ்வரி. இவருக்கு செந்தில் குமார் என்ற கணவர் உள்ளார்.

செந்தில் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் மாரீஸ்வரி வீடு கட்டுவதற்காக திருப்புவனம் பன்னீர்செல்வம், லாடனேந்தலை சேர்ந்த கீதா, பானுமதி மற்றும் மதுரை சதீஷ்குமார் ஆகியோரிடம் மொத்தமாக 1 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.

1 லட்சத்தைப் பெற்று, வட்டிக்கு மேல் வட்டி என்ற நிலையில், அசலும் வட்டியுமாக சேர்த்து மொத்தமாக 6 லட்சம் ரூபாய் பணத்தை திரும்பி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் மாரீஸ்வரி, அனைத்துப் பணமும் செலுத்திய நிலையில் இன்னும் 4 லட்சம் ரூபாய் கந்துவட்டி கேட்டு தொந்தரவு செய்கிறார்கள்.

உயிரை விடுவதைத் தவிர வேறுவழியில்லை என கூறி அவர் விஷத்தை குடித்துள்ளார்.

அது தொடர்பான வீடியோ வாட்ஸ் அப்பில் வைரலாகியதைத் தொடர்ந்து விஷம் குடித்த மாரீஸ்வரி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் மாரீஸ்வரி திருப்புவனம் காவல் நிலையத்தில் முன்னரே புகார் கொடுத்தும், காவல் நிலையத்தார் மெத்தனமாக இருந்ததாலே இந்த முடிவு எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like