பஸ்ஸில் ஏற ஓடிச் சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட அவலம்!

பஸ்ஸைப் பிடிக்க ஓடிய போது கல்லில் கால் தடுக்கி விழுந்ததில் மயக்கமடைந்த பெண்ணொருவர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்ததாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் கதிரவெளி – புதூர் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் செல்லாச்சி (வயது 63) என்ற 8 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் வெருகல் பகுதியிலுள்ள தனது மரக்கறித் தோட்டத்திலிருந்து கதிரவெளிக்கு செல்வதற்காகத் தயாரானபோது பஸ் வருவதைக் கண்டு பஸ்ஸை நிறுத்தி ஏறிக்கொள்வதற்காக ஓடிச் சென்றுள்ளார்.

அப்போது கால் கல்லில் தடக்கி வீழ்ந்து மயக்கமடைந்துள்ளார். உடனடியாக அவரை வாகரை மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோதும் ஏற்கெனவே அவர் உயிர் பிரிந்து விட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் சனிக்கிழமை மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like