மைத்திரியால் நியமிக்கப்பட்டுள்ள புதிய ஆளுநருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், சப்ரகமுவ மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட சிரேஷ்ட விரிவுரையாளர் தம்ம திஸாநாயக்க, ஆளுநர் பதவியில் கடமையாற்ற தடையேற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஆளுநர் பதவியில் கடமையாற்ற அரச சேவையில் விடுமுறையை பெற்றுக்கொள்வதில் காணப்படும் சிக்கலே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

இந்த பிரச்சினையை தீர்க்க முடியாது போனால், திஸாநாயக்க ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வார் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

தம்ம திஸாநாயக்க, கொழும்பு பல்லைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராக கடமையாற்றி வருகிறார்.