யாழில் கோடரியால் அடித்து கொலை செய்யப்பட்ட இளைஞன்!

யாழ்ப்பாணம் – கற்போவளம் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளது.

குறித்த இளைஞன் கோடரியால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் வாசுதேவன் அமல்கரன் எனும் 22 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது குறித்த பகுதியில் பதற்ற நிலமை ஏற்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles