16 வயதில் பூத்து குலுங்கிய காதல்! பெண்ணின் தலையை துண்டித்த தந்தையின் வெறிச்செயல்

16 வயது மகளை அவரது பெற்றோர் தலையை துண்டித்து கொலை செய்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பீகாரில் மகள் காதல் வயப்பட்டதால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த 16 வயது சிறுமி கானாமல் போனதாக அவரது பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.பொலிஸார் புகாரைப் பெற்றுக்கொண்டு சிறுமியை தேட ஆரம்பித்தனர். அப்போது சிறுமி தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

பொலிஸாருக்கு சிறுமியின் பெற்றோர் மீது சந்தேகம் ஏற்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தது. சிறுமி ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார்.

காதலனுடன் ஓடிப்போன பெண்ணை மீட்ட பெற்றோர் கோபத்தில் சிறுமியை தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர்.

இதையடுத்து பொலிஸார் சிறுமியின் பெற்றோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles