தைப்பொங்கலுக்கு புத்தாடை எடுத்துக்கொடுக்காததால் மனைவி தற்கொலை!

தைப்பொங்கலுக்கு புத்தாடை எடுத்துத் தர கணவன் மறுத்ததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் வசித்து வரும் நிர்மலேஸ்வரன் (32) என்பவருக்கு, செல்லத்தம்பி புஸ்பராணிக்கு (26) என்பவருக்கு இடையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

மேலும் இவர்களுக்கு நான்கரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

ஓடாவித் தொழில் செய்து வரும் நிர்மலேஸ்வரனுக்கு சில நாட்களாக தொழில்கள் எதுவும் சரிவராததால், நாளை தைப்பொங்கல் பெருநாளை கொண்டாடக்கூட வசதியின்றி இருந்துள்ளார்கள்.

இந்நிலையில் கணவரோரு புத்தாடை வாங்க பணம் தருமாறு கேட்டு நேற்றிலிருந்து முறன்பட்டுள்ளார். அடுத்தநாள் காலை விழித்தெழுந்ததும், புத்தாடை பிரச்சினை மீண்டும் எழுந்துள்ளது.

நான்கரை வயது மகளுடன் வீட்டின் விறாந்தையில் இருந்து கொண்டிருந்த கணவருடன், மனைவி தொடர்ந்து நச்சரித்துக்கொண்டு இருந்தார்.

பின் கணவன் மனைவிடம் கூறுகையில், புதுவருடத்துக்கு கடனுக்கு வாங்கிய ஆடைகளுக்கே இன்னும் பணம் கொடுத்து முடியல்ல. கொஞ்சம் பொறுமையாயிரு!, சித்திரைக்காவது எடுத்துத் தருகிறேன் என கூறிவிட்டார்.

இதை கேட்டு ஆத்திரமடைந்த மனைவி “இரு உனக்கு காட்டுறன் வேல ” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்று கதவை பூட்டியுள்ளார்.

குழந்தையோடு விளையாடிகொண்டிருந்த கணவன், வீட்டுக்குள் சென்ற மனைவியை பத்துநிமிடமாகியும் காணவில்லை என்பதால், புஸ்பா, புஸ்பா என கணவரும், அம்மா, அம்மா என குழந்தையும் அழைத்த போது, பதிலேதும் கிடைக்காததால் வீட்டின் யன்னலை உடைத்துக்கொண்டு விட்டுக்குள் சென்றுள்ளார்.

பின் படுக்கையறை காற்றாடியில் சாறியொன்றினால் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு, அயலவர்களை சப்தமிட்டு அழைத்து, கழுத்தில் கட்டப்பட்டிருந்த சாறியை கத்தியினால் அறுத்து, அவசரமாக சந்திவெளி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

வைத்தியசாலையில் பரிசேதனை செய்த வைத்தியர்கள் இவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கனவனிடம் தெரிவித்துள்ளனர்.

மேலும், இச்சம்பவத்தை ஏறாவூர் பொலிசாருக்கு தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு சென்று விசாரனைகளை மேற்கொண்டு, பொலிசார் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

வைத்திய சாலையில் பிரேத பரிசோதனை முடித்தற்கு பின்னர் சடலத்தை கணவரிடம் ஒப்படைத்தனர்.

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles