வைத்தியசாலையில் தூக்கில் தொங்கிய நோயாளி!

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் நோயாளி ஒருவரின் சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இறந்தவர் 59 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த நபர் பல நாட்களாக மருத்துவமனையில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles