கோனேஸ்வரன் கோயிலுக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த கதி

திருகோணமலை -சங்கமித்தரா கடற் பகுதியில் நீராடச் சென்று அலையில் சிக்கி 04 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

தைபொங்கல் தினமான நேற்றைய தினம் கோனேஸ்வரன் கோயிலில் இடம்பெற்ற நிகழ்விற்கு சென்றதனை தொடர்ந்து நீராட சென்றுள்ள நிலையிலே குறித்த அனர்த்தத்தில் சிக்கியுள்ளனர்.

பணியில் ஈடுபட்டிருந்த திருகோணமலை காவற்துறை பாதுகாப்பு பிரிவினர் குறித்த 04 பேரையும் மீட்டு முதல் உதவி வழங்குவதற்காக திருகோணமலை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.