தமிழினத்தின் காவலனாக மாறிய எம்.ஏ. சுமந்திரன்! மேளதாளங்களுடன் அழைத்து வந்த யாழ்.வடமராட்சி மக்கள்

தமிழினத்தின் காவலனே வருக வருக என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிற்கு பருத்தித்துறையில் பிரமாண்ட வரவேற்பளிக்கப்பட்டது.

இந்த வரவேற்பு நிகழ்வு இன்று மாலை வடமராட்சி பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் பருத்தித்துறை நகரில் இடம்பெற்றது.

இதன் போது மாலைகள் அணிவித்து பொன்னாடைகள் போர்த்தி மேளதாளங்களுடன் எம்.ஏ.சுமந்திரன் வடமராட்சி பருத்தித்துறை நகரிலிருந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து பருத்தித்துறை முக அருகிலுள்ள கொண்டன பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது.

இதேவேளை, இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles