இலங்கையை பரபரப்பாக்கிய காணொளி! அதிர்ச்சியில் பொலிஸார்

இலங்கையை பரபரப்பாக்கிய காணொளி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள சிறைக்கைதிகளை காவலர்கள் கடுமையாக தாக்கிய சம்பவம் தொடர்பில் காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

கொழும்பில் சிறைக்கைதிகளை பாதுகாக்கும் குழு இன்று இந்த காணொளியை செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டது.

அதில், வரிசையாக நிறுத்தப்பட்டுள்ள சிறைக்கைதிகள் சிலரை காவலர்கள் தாக்கும் காட்சி பதிவாகியுள்ளது.

கடந்த காலம் முழுவதும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் சித்திரவதைகளை எதிர்நோக்கி வந்தனர்.

கைதிகள் அனைவரும் சந்தேக நபர்கள் எனவும் அவர்களை தாக்குவது மிகவும் கொடூரமானது என கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 21 ஆம் திகதி அங்குகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறையில் இருக்கும் கைதிகளை பார்வையிட வரும் உறவினர்களின் ஆடைகளை விசேட அதிரடிப்படையினர் களைந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிறைச்சாலையில் ஏற்பட்ட இந்த நிலைமைக்கு சிறைச்சாலை அத்தியட்சகர் முற்றாக பொறுப்புக் கூற வேண்டும் என கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவின் செயலாளர் தினேஷ் நந்திமால் தெரிவித்துள்ளார்.